நோய்களின் உளவியல்
நோய்களின் உளவியல் - ஹீலர்.அ.உமர் பாரூக் விஞ்ஞானம் என்பது விஞ்ஞானி எதைச் செய்கிறாரோ அதையே உண்மை என்கிறது – கலீல் ஜிப்ரான் உளவியல் என்பது மனிதர்களுக்குத்தானே இருக்கும்? நோய்களுக்குமா உளவியல் இருக்கிறது.? என்ற உங்கள் கேள்விக்கு இக்கட்டுரையின் மூலம் விடைதேட முயல்வோம். நாம் உளவியல் பற்றி பேசுவதற்கு முன்னால் ஒரு அமெரிக்கச் சம்பவத்தைப் பார்த்து விடலாம். அமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் இருந்த சாம் லாண்டி என்ற நபருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக அவருடைய மருத்துவரால் கண்டறியப்பட்டது. புற்றுநோய் கடைசிக்கட்டத்தை எட்டி விட்டதாக மருத்துவப் பரிசோதனைகள் கூறின. சிகிச்சையளிக்க முடியாத நிலைக்கு புற்றுநோய் போய்விட்டதாகக் கூறிய அவருடைய டாக்டர்.மெடர் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் லாண்டி இறந்துபோய் விடுவார் என்றும் கூறினார். அதே போல இரண்டு வாரங்களில் சாம் லாண்டி மரணமடைந்தார். புற்றுநோய் முற்றிப்போய் சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நோயாளி மரணமடைவதில் என்ன புதுமை இருக்கிறது? இப்படி நோயாளிகள் இறப்பது வழக்கமான விஷயம்தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்குதான் விஷயமே இருக்கிறது....