Google for தமிழ்
Google for தமிழ் சென்னையில் மார்ச் 13 அன்று "Google for தமிழ்" என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் வலைப்பதிவர்கள், இணையத்தளத்தார், வெளியீட்டாளார்கள், யூட்யூப் காணொளி உருவாக்குநர் மற்றும் விளம்பர கூட்டாளர்கள் எனச் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூகிளுக்கு இது வணிக நிகழ்வு என்றாலும் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் win-win வாய்ப்பாகும். கூகிளில் ஒரு முக்கியத் தகவல் தொடர்பாகத் தேடினால் அதனைப்பற்றிய தகவல் சுருக்கத்தைப் பக்கவாட்டில் காட்டும். உதாரணம், ஸ்ரீதேவி என்று தமிழில் தேடினால் அவர் பற்றிய சிறுகுறிப்பைக் காட்டும். இதனைத் தகவல் கோட்டுரு (knowledge graph) என்று அழைக்கிறோம். தற்போதைக்குத் தமிழ் உட்பட இந்தி, வங்காள மொழி, தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய ஆறு இந்திய மொழிகளில் இவ்வசதி உள்ளது. எனவே ஒரு பயனர் தமிழில் தேடினாலும் தேடப்படும் தகவலைப் புரிந்துகொண்டு இந்தச் சுருக்கத்தைக் காட்டுகிறது. ஒரு மொழி கட்டுரையைப் பிற மொழியில் மொழிபெயர்த்துத் தரும் எந்திர மொழிபெயர்ப்பு (Neural Machine Translation) வசதி தமிழ் உட்பட மலையாளம், கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, சிந்...